Thursday, February 28, 2008

419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(

தேசிகனிடம் பேசினேன். மிக்க சோகத்தில் இருக்கிறார் என்பது குரலிலேயே தெரிந்தது. கடந்த 2 நாட்களாக நினைவு இன்றி தான் சுஜாதா இருந்ததாக அவர் கூறினார். சுஜாதாவுக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்திலும் பிரச்சினைகள் !

அவரது 70-வது பிறந்தநாளின் போது "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வைணவ பாரம்பரியத்தின்படி வாழ்த்தி நான் எழுதிய பதிவு இங்கே

என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Rest in Peace, Sujatha Sir !

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்! மாபெரும் இழப்பு, எழுத்துலகிற்கு.

dondu(#11168674346665545885) said...

மனம் நிஜமாகவே கனமாகத்தான் உள்ளது. சுஜாதாக்களுக்கு மரணம் கிடையாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வவ்வால் said...

ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!

enRenRum-anbudan.BALA said...

வாசுதேவன் லட்சுமணன், வவ்வால்,
உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

ராகவன் சார்,
தங்கள் பதிவை வாசித்தேன். கடைசி இரண்டு வரிகள் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது !

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails